இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலையை தடுப்பதற்காக 2006 ஆம் ஆண்டு 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபை சட்டத்தினால் நிறுவப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகாரசபையானது ஒரு முன்னோடி அரச நிறுவனமாகும்.

புகையிலை நோய்தொற்று பரவலுக்கு பொறுப்புக் கூறும் வகையில்,2003 ஆம் ஆண்டு உலக நாடுகளால் விரிவாக்கப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு சாசனமே (WHO-FCTC) உலகின் முதலாவது சுகாதார உடன்படிக்கையாகும்.ஆதாரம் சார் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO-FCTC) சட்டரீதியாக ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக முதன்முதலாக புகையிலை மற்றும் மதுசாரத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தொடர்ச்சியாக இனங்கண்ட நாடுகளில் ஒன்று இலங்கையாகும்.

தூரநோக்கு

பணிக்கூற்று

நோக்கங்கள்

  • பொதுச்சுகாதாரத்தை பாதுகாத்தல் பற்றிய கொள்கைகளை இனங்காணல்.
  • புகையிலை மற்றும் மதுசார பொருட்கள் உற்பத்தி செய்யப்படுதல், சந்தைப்படுத்தல் மற்றும் நுகரப்படுதலை மதிப்பிடுதல் மற்றும் கண்காணித்தல் ஊடாக புகையிலை மற்றும் மதுசாரத்தால் ஏற்படும் தீங்குகளை ஒழித்தல்.
  • புகையிலை மற்றும் மதுசார உற்பத்திப்பொருட்கள் கிடைப்பனவை குறைத்தல் மூலம் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலிலிருந்து ஆட்களை குறிப்பாக சிறுவர்களை தடுத்தல்.
FaLang translation system by Faboba