‘'மாவட்டரீதியாக புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான வளகுழு ஒன்றிற்கு பயிற்சியளிக்கும்’' பயிசிப்பட்டறையின் இரண்டாவது முயற்சியாக இம்முறை தொற்றாத நோய்க்குரிய வைத்திய அதிகாரிகளையும் மனநல வைத்திய அதிகாரிகளையும் ஊவா சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். முன்னர் இதே போன்ற பயிறசிப்பட்டறை தென்மாகாணத்திலும் மேல்மாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இப்பயிறசிப்பட்டறைகள் புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்;றிற்கான தேசிய அதிகார சபையினால் சுகாதார அமைச்சின் துணையுடன் ஒழுங்கமைக்கப்படுகிறது.

இம்முறை பயிற்சிப்பட்டறை 2017 ஜீன் மாதம் 5ம் 6ம் திகதிகளில் அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் வதிவிட பயிற்சிப்பட்டறையாக 35 வைத்தியரகளைக கொணடு வெறறிகரமாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது பேராசியர் தியனாத் சமரசிங்கவினதும் Dr.ஜயமால் டி சில்வாவினதும் (மன நல வைத்திய அதிகாரி) வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
இதற்கு முன்னர் பயிற்சியளிக்கப்பட்ட வைத்திய அதிகாரிகளும் இதில் பங்குபற்றினர்;. அவர்கள் தமது பயிற்சிப்பட்டறைகளிலிருந்து பெற்ற அனுபவங்களை பார்வையாளர்களுடன்; பகிர்ந்து கொண்டனர்.

 

FaLang translation system by Faboba